அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (IRCSL)

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (ஐசுஊளுடு) என்றால் என்ன?

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு என்பது, இலங்கை காப்புறுதிக் கைத்தொழிற்துறையின் அபிவிருத்தி, மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நோக்கத்திற்காக 2000ஆம் ஆண்டு 43ஆம் இலக்க காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட காப்புறுதி கைத்தொழிற்துறை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பாகும். ஆணைக்குழுவின் நோக்கம் மற்றும் பொறுப்பாக அமைவது, இலங்கையில் காப்புறுதி வியாபாரம் காப்புறுதிப் பூட்கையாளர்கள் மற்றும் உத்தேசப் பூட்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தொழில்சார் மற்றும் நேர்மையான வகையிலும் மற்றும் விவேகமான முறையில் பரிவர்த்தனை செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதாகும்.

சட்டம் மற்றும் திருத்தங்களைப் பார்வையிடுவதற்கு, கீழ்வரும் இணைப்பை பின்தொடரவும் –
https://ircsl.gov.lk/quick-links/insurance-legislation/regulation-of-insurance-industry/ 

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் யார் வருவார்கள்?

இலங்கையில் தொழிற்படும் அனைத்துக் காப்புறுதியாளர்கள், காப்புறுதித் தரகர்கள் மற்றும் நட்ட சீராக்கராலளர்கள் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்பார்வையின் கீழ் வருவார்கள். கீழ்வரும் நிறுவனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது:

1. கமத்தொழில் மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை

2.இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

3. சமூக பாதுகாப்பு சபை

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எவை?
  • காப்புறுதியாளராக நபர்களைப் பதிவுசெய்தல்
  • காப்புறுதித் தரகர்களாக நபர்களைப் பதிவுசெய்தல்
  • நட்ட சீராக்களாலர்களாக நபர்களைப் பதிவுசெய்தல்
  • காப்புறுதி கைத்தொழிற்துறையின் அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.
  • காப்புறுதி கைத்தொழிற்துறைக்கு அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான இருதரப்பு மற்றுமம் பல்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வருதல்.
  • ஆணைக்குழுவின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளல், செயற்படுத்தல் மற்றும் நிறைவேற்றுதல் எனும் நோக்கங்களுக்கு அவசியமான அத்தகைய அலுவலர்கள் மற்றம் ஊழியர்களை தொழிலுக்கு அமர்த்துதல்
  • எந்தவொரு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை கையகப்படுத்தல் மற்றும் வைத்திருத்தலுடன் அவற்றினை விற்றல், குத்தகைக்குவிடுதல் அல்லது அவற்றினை கையுதிர்த்தல்
  • அதன் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளல், செயற்படுத்தல் மற்றும் நிறைவேற்றுதல் எனும் நோக்கங்களுக்கு அவசியமான அத்தகைய அனைத்து ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளல்
  • சட்டத்தின் கீழ் வரும் அதன் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளல், செயற்படுத்தல் மற்றும் நிறைவேற்றுதல் எனும் நோக்கங்களுக்கு அவசியமான அத்தகைய செயற்பாடுகைளயும் மேற்கொள்ளல்.
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் பூட்கையாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் எவை?
  • கோரிக்கைகள் தொடர்பான முரண்பாடுகளைத் தீரத்தல் – எந்தவொரு உரிமை கோருபவரின் பரிந்துரையின் கீழ் பாதிக்கப்பட்டவரின் காப்புறுதிக் கோரிக்கைகள் தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்துவைப்பதற்கு ஐசுஊளுடு தலையீடுகளை மேற்கொள்ளுகின்றது. முரண்பாடுகளை தொடரரா முறைமையின் ஊடாக அனுப்ப முடியும். (https://ircsl.gov.lk/policyholder-complaints-form.html), by email (info@ircsl.gov.lk), by fax or post.
  • காப்புறுதிக் கைத்தொழிற்துறை தொடர்பான தகவல்களின் ஏற்பாடு – ஐசுஊளுடுயின் செய்தி வெளியீடுகளை கீழ்வரும் இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்: https://ircsl.gov.lk/publications/press-releases.html
  • விழிப்புணர்வை உருவாக்கல் –
    • விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் – காப்புறுதி மற்றும் அது தொடர்பான விடயங்களை அறிவூட்டுவதற்கு நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களின் ஊடாக விழிப்புணர்வு நிகழ்சிகளை நாங்கள் நடாத்துகின்றோம். அத்துடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசஃ தனியார் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் நிகழ்சிகளை நடாத்துகின்றோம்.
    • அச்சிடப்பட்ட சாதனங்கள் – ஐசுஊளுடு வின் விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் வெளியீடுகளை கீழ்வரும் இணைப்பினை பயன்படுத்தி பார்வையிட / பதிவிறக்கம் செய்ய முடியும். https://ircsl.gov.lk/publications/publications-available-free-of-charge.html
    • தொலைக்காட்சி நிகழ்சிகள் – கீழ்வரும் இணைப்பினைப் பயன்படுத்தி வீடியோக்களைப் பார்வையிட முடியும் https://www.youtube.com/channel/UCBpYWbTGwJ1CyMNmPxtKZcA/videos
    • வானொலி நிகழ்சிகள் – கீழ்வரும் இணைப்பினைப் பயன்படுத்தி ஓடியோக்களை கேட்க முடியும்  https://www.youtube.com/channel/UCBpYWbTGwJ1CyMNmPxtKZcA/videos

 

எங்கள் தொடர்புகொள்ளல் விபரங்கள்:

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு

11 ஆவது மாடி, கிழக்கு கோபுரம்

உலக வர்த்தக மையம்

கொழும்பு 01

தொலைபேசி: 011 2396184-9

பக்ஸ்: 011 2396190

மின்னஞ்சல் – info@ircsl.gov.lk
வெப்தளம் – www.ircsl.gov.lk

காப்பறுதிக் கைத்தொழில்

காப்புறுதியார் என்பவர் யார்?

சட்டத்தின் கீழ் இலங்கையில் காப்புறுதி வியாபாரத்தை கொண்டு நடாத்துவதற்கு பதிவுசெய்த கம்பனி.

இலங்கையில் எத்தனை காப்புறுதியார்கள் உள்ளனர்?

31 டிசம்பர் 2023 அன்று, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைகுழுவில் பதிவுசெய்த காப்புறுதியாளர்களின் எண்ணிக்கை இருபத்தியெட்டு (28) ஆகும். இவற்றில் இரு கம்பனிகள் கலவை கம்பனிகளாக நீண்டகால காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதி வியாபாரங்களை மேற்கொள்ளுகின்ற வேளையில், பதின்நான்கு (14) கம்பனிகள் நீண்டகால காப்பறுதி வியாபாரத்தையும் பன்னிரெண்டு (12) கம்பனிகள் பொது வியாபாரத்தையும் மேற்கொள்ளுகின்றன. தற்போது பதிவுசெய்துள்ள காப்புறுதியார்கள் பற்றி தெரிந்துகொள்ள தயவுசெய்து கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும்.

https://ircsl.gov.lk/insurance-companies.html

நீண்டகால காப்புறுதி வியாபாரம் என்றால் என்ன?

மனித உயிர்கள் தொடர்பான உத்தரவாத ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் அல்லது பேணும் வியாபாரம். இவ்வாறன ஒப்பந்தங்கள் மரணத்தின்; போது அல்லது மனித உயிருக்கு ஏதேனும் தற்செயல் நிகழ்வின் போது பணக்கொடுப்பினை உத்தரரவாதப்படுத்தும் ஒப்பந்தங்கள் மற்றும் மனித வாழ்க்கையைச் சார்ந்திருக்கும் ஒரு காலத்திற்கு பீரிமியாக் கொடுப்பனவுக்கு உட்பட்ட ஒப்பந்தங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள். அத்தகைய ஒப்பந்தங்கள் பின்வரும் துணை ஒப்பந்தங்களை உள்ளடக்கியதாக கருதப்படுகின்றது.

  • ஆயுள்
  • நீண்ட காலத்துடன் தொடர்புடையவை
  • ஆண்டுத்தொகை
  • அங்கவீனம் மற்றும் பல்வகை இழப்பீடுகளை வழங்கல், விபத்து மற்றும் நோய் நன்மைகளுக்கான ஒப்பந்தங்கள், அவ்வாறான ஒப்பந்தங்களில் குறித்துரைக்கப்பட்டவைகள்.
  • நிலையான உடல்நலம்
  • மூலதன மீட்பு ஒப்பந்தங்கள்
  • ஒய்வூதிய பூட்கைள்
பொதுக் காப்புறுதி வியாபாரம் என்றால் என்ன?

நீண்டகால காப்புறுதி வியாபாரம்” எனும் வரைவிலக்கணத்திற்குள் குறிப்பிடப்படாத ஏனைய அனைத்து காப்புறுதி வியாபாரங்களையும் உள்ளடக்கியிருப்பதுடன் அவை பின்வரும் துணை ஒப்பந்தங்களை உள்ளடக்கியிருக்கும்:

  • கடல், விமான அல்லது இடம்மாற்றல் காப்புறுதிக் கொள்கைகள்
  • தீக் காப்புறுதி வியாபாரம்
  • மோட்டார் வாகன காப்புறுதி வியாபாரம்
  • சுகாதார காப்புறுதி வியாபாரம்
  • தொழில் வழங்குனர் பொறுப்பு காப்புறுதி வியாபாரம்
  • நானாவித காப்புறுதி வியாபாரம்
காப்புறுதித் தரகர் என்பவர் யார்?

காப்புறுதி முகவர் என்பது காப்பறுதி தரகர் வியாபாரத்தை கொண்டு நடாத்துவதற்கும் தரகுக்கூலி அல்லது தரகுக் கொடுப்பனவு எதிர்பார்ப்புடன் காப்புறுதிக் கம்பனி அல்லது மீள்காப்புறுதிக் கம்பனியுடன் காப்புறுதியாளர், காப்பறுதிப் பூட்கையாளர், காப்புறுதி அல்லது மீளாகாப்புறுதி முன்மொழிவாளர் சார்பாக காப்புறுதி வியாபார இடைத்தரகாரக செயற்படும் நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு 2000ஆம் ஆண்டு 43ஆம் இலக்க காப்புறுதி கைத்தொழிற்துறை ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்டவராவர்.

தற்போது பதிவுசெய்துள்ள காப்புறுதித் தரகர்கள் பற்றி தெரிந்துகொள்ள தயவுசெய்து கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும்.

https://ircsl.gov.lk/insurance-brokers.html

நட்ட சீராக்கலாளர் என்பவர் யார்?

புலன் விசாரணைகளை மேற்கொள்வதில் சிறந்த அறிவினைக் கொண்டிருப்பதுடன் காப்புறுதிக் கோரிக்கைகளில் இருந்து எழும் நட்டங்களை மதிப்பிடும் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நட்ட சீராக்கலாளராக பதிவுசெய்யப்பட்ட நபர் நட்ட சீராக்களாளர் எனக் குறிப்பிடப்படுவார்.

தற்போது நட்ட சீராக்கலாளராக பதிவுசெய்துள்ளவர்கள் பற்றி தெரிந்துகொள்ள தயவுசெய்து கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும்.

https://ircsl.gov.lk/quick-links/instructions-and-guidelines/licensing-guide/loss-adjusters/

காப்புறுதி முகவர் என்பவர் யார் மற்றும் அவருடைய வகிபாகம் என்ன?

2000ஆம் ஆண்டு 43ஆம் இலக்க காப்புறுதி கைத்தொழிற்துறை ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் காப்புறுதிக் கம்பனி அல்லது காப்பறுதி முகவர் கம்பனியியில் காப்புறுதி முகவராக பதிவுசெய்து கொண்ட நபர் ஆவதுடன் தரகினைக் கருத்தில் கொண்டு அந்தக் காப்புறுதிக் கம்பனி அல்லது காப்புறுதித் தரகருக்காக காப்புறுதி வியாபாரத்தை கோரும் அல்லது பெறுகை செய்யும் நபராவார். ஐசுஊளுடு இனால் விநியோகிக்கப்பட்டுள்ள சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் விதிகள் காப்புறுதித் தரகராக வருவதற்கு நபரொருவருக்கு அவசியமான குறைந்தபட்ச தகைமையை வரையயை செய்துள்ளது.

காப்புறுதிப் பூட்கையாளர் என்பவர் யார்?

ஒரு காப்புறுதிப் பூட்கையை வைத்திருக்கும் நபர் மற்றும் தற்செயலான நிகழ்வின் நிழலில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பயன்படுத்துவததற்கான சிறப்புரிமை பெற்றவர்.

காப்புறுதிப் பூட்கையாளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்ன?

உரிமைகள்

  • தெரிவிக்கப்பட வேண்டும்
  • நீங்கள் செலுத்துவதைப் பெறுதல் வேண்டும்
  • நல்ல நம்பிக்கையுடன் நடத்தப்படுதல்; வேண்டும்
  • நிவர்த்தி செய்தல் வேண்டும்

கடமைகள்

  • நல்லெண்ணத்துடன் செயல்படல் வேண்டு;
  • உரிய நேரத்தில் கொடுப்பனவுகளை மேற்கொண்டு காப்புறுதிப் பூட்கையினைப் பராமரித்தல் வேண்டும்
  • காப்புறுதிப் பூட்கை ஆவணத்தை விளங்கிக்கொள்ளல் வேண்டும்
  • கோரிக்கை செயன்முறையின் போது ஒத்துழைத்தல் வேண்டும்

 

காப்புறுதிப பூட்கையாளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பாக தெரிந்துகொள்ள தயவுசெய்து கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும்.

https://ircsl.gov.lk/images/brochures_foc/Know_your_rights_and_duties_English.pdf

யார் பயன் பெறுனர்?

காப்புறுதிப் பூட்கைக்கு உரிய நபர் இறந்து போனால் நன்மைகளைப் பெற்றுப் பொள்வதற்கு ஆயுள் காப்புறுதிப் பூட்கையில் காப்புறுதிப் பூட்கையாளரினால் பிரகடனப்படுத்தப்பட்ட நபர் (அல்லது நபர்கள்) ஆவார்.

யார் கோரிக்கையாளர்?

குறித்துரைக்கப்பட்ட நட்டத்தை ஈடு செய்வற்கு குறிப்பிட்ட காப்பறுதியாளரிடமிருந்து கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக காப்புறுதிப் பூட்கையின் கீழ் முறையான வேண்டுகோளை கோரும் அல்லது கோப்பிடும் நபராவார். கோரிக்கையாளர் பூட்கையாளர், நன்மைபெறுனர் அல்லது மூன்றாந்தரப்பினராக இருக்கக்கூடும்.

காப்பறுதிக் கைத்தொழிற்துறை தொடர்பான மேலதிக் விரபங்கள் எங்கள் சமீபத்திய வருடாந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, அதனை கீழ்வரும் இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்

https://ircsl.gov.lk/quick-links/publications/annual-reports/